புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி

குன்னூரில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது.

Update: 2022-06-20 14:40 GMT

குன்னூர், 

குன்னூர் மவுண்ட் ரோட்டில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பங்கு மக்கள் சார்பில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலையில் பங்கு தந்தைகள் ஜான்மரிய லியான்னி, மார்டின் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நடந்தது. கப்பல் போன்று வடிவமைக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்