புனித அந்தோணியார் ஆலய தேரோட்டம்
கோவில்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய தேரோட்டம் நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. தேரில் மிக்கேல் அதிதூதர், அந்தோணியார், சூசையப்பர் ஆகிய புனிதர்களின் உருவம் கொண்ட 3 தேர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ஆலோசியஸ் துரைராஜ், உதவி பங்கு தந்தை மிக்கேல் மகேஷ் மற்றும் இலுப்பையூரணி சுற்றுவட்டார பகுதியை ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.