எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
எஸ்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர் எம்.எழிலரசி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பி.வினோத்குமார் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.