எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.;

Update: 2023-11-16 04:15 GMT

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

அதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:-

• 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது.

• 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி முடிவடைகிறது.

• 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி முடிவடைகிறது.

தேர்வு முடிவுகள்:-

• 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 10-ம் தேதி வெளியிடப்படும்.

• 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 14-ம் தேதி வெளியிடப்படும்.

• 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6-ம் தேதி வெளியிடப்படும்.

10, 11, 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள்:-

• 10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி முடிவடைகிறது.

• 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24-ம் தேதி முடிவடைகிறது.

• 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17-ம் தேதி முடிவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்