எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆய்வு

தஞ்சை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆய்வு செய்தார்.

Update: 2023-09-13 21:04 GMT

தஞ்சை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை ரெயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம், ரெயில்வேதுறை மற்றும் போக்குவரத்துறை ஆகியவை சார்பில் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் தீபக் ஜேக்கப், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தஞ்சை மற்றும் கும்பகோணம் ரெயில் நிலையங்களின் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக தஞ்சை ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருவது குறித்தும் ரெயில் நிலையம் முன்பு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவது குறித்தும், கும்பகோணம் ரெயில்வே பிளாட்பார விரிவாக்க பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கூரைகள்

பின்னர் அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தஞ்சை ரெயில் நிலையத்தில் அனைத்து பிளாட்பாரங்களிலும் மேற்கூரைகள் முழுவதுமாக அமைக்கப்படும். லிப்ட் வசதி, எக்ஸ்லேட்டர் வசதி 5 பிளாட்பாரங்களிலும் அமைக்கப்படும். ரெயில் நிலையம் முன்பு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிதாக சாலை அமைக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சை), பூர்ணிமா (கும்பகோணம்), ரெயில்வே முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்