கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. வெற்றி

தெற்கு ரெயில்வே ஊழியர்களின் கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை கோட்டத்தை சேர்ந்த முகமதுரபிக்குதீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-08-28 18:14 GMT

தெற்கு ரெயில்வே ஊழியர்களின் கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை கோட்டத்தை சேர்ந்த முகமதுரபிக்குதீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல்

திருச்சியில் தெற்கு ரெயில்வே ஊழியர்களின் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் கூட்டுறவு சங்க விதிகளின் படி இயங்கும் ஒரு பெரிய நிறுவனம் ஆகும். இந்த சங்கத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பணியாற்றும் ரெயில்வே ஊழியர்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சங்கத்தை 2 பெண்கள் உட்பட 19 பேர் கொண்ட இயக்குனர்கள் குழு நிர்வகிக்கும். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுடன் ஆர்.ஜி.பி. உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி, தெற்கு ரெயில்வே கோட்டங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

எஸ்.ஆர்.எம்.யு. வெற்றி

இதில் திருச்சி மற்றும் பொன்மலையில் 6 இயக்குனர்கள், திருச்சி ஓப்பன் லைன்-2, மதுரை கோட்டம்-2, சென்னை கோட்டம்-2, சேலம் மற்றும் பாலக்காடு கோட்டம்-3, திருவனந்தபுரம் கோட்டம்-1, பெண்கள்-2, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு-1 என்று 19 இயக்குனர் பதவிக்கான தேர்தல் பல கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க உதவி இயக்குனர் ஆர்.ராஜசேகரன் செயல்பட்டார்.

இதில், எஸ்.ஆர்.எம்.யு., டி.ஆர்.யு.இ., எஸ்.ஆர்.இ.எஸ்., ஏ.ஐ.ஓ.பி.சி., எஸ்.சி.எஸ்.டி. சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு, கடந்த 26-ந்தேதி திருச்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.யு. அனைத்து இடங்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு முதல் இந்த சங்கத்தை சேர்ந்தவர்களே வெற்றி பெற்று வருகிறார்கள்.

19 இயக்குனர்கள்

திருச்சியில் தெற்கு ரெயில்வே ஊழியர்களின் கூட்டுறவு கடன் சங்க 2023-28-ம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குனர்கள் விவரத்தை கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.ராமலிங்கம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:-

திருச்சியில் தெற்கு ரெயில்வே ஊழியர்களின் கூட்டுறவு கடன் சங்க 2023-28-ம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு தேர்தலில் 1-வது மண்டலத்தில் (திருச்சி மற்றும் பொன்மலை) எம்.தேவேந்திரன், கே.கிரண்குமார், கே.முருகானந்தம், கே.சதீஸ்வரன், எஸ்.சுதாகர், ஆர்.விஜயகுமார் ஆகியோரும், 2-வது மண்டலத்தில் (திருச்சி ஓப்பன் லைன்) ஆா்.ஜெயகுமார், ஆர்.மணிவண்ணன் ஆகியோரும், 3-வது மண்டலத்தில் (மதுரை கோட்டம்) ஜே.முகமது ரபிக்குதீன், பி.சீதாராமன் ஆகியோரும் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 4-வது மண்டலத்தில் (சென்னை கோட்டம்) வி.பாஸ்கரன், எஸ்.தமிழ்செல்வன் ஆகியோரும், 5-வது மண்டலத்தில் (சேலம் மற்றும் பாலக்காடு கோட்டம்) என்.பாஸ்கர், என்.நவேந்திரன், எஸ்.ராஜேஷ் ஆகியோரும், 6-வது மண்டலத்தில் (திருவனந்தபுரம் கோட்டம்) எஸ்.கோபிகிருஷ்ணா ஆகியோர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் பெண்கள் பிரிவில் ஆர்.அன்னமேரி, பி.சாந்திதங்கம் ஆகியோரும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சி.செந்தில்குமாரும் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர் தேர்வு

இதில் 3-வது மண்டலத்தில் (மதுரை கோட்டம்) வெற்றி பெற்ற இயக்குனர் ஜே.முகமது ரபிக்குதீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட அனைத்து மண்டலங்களிலும் போட்டியிட்ட எஸ்.ஆர்.எம்.யு. ஆா்.ஜி.பி. வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியானது எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளரும், புதுடெல்லி ஏ.ஐ.ஆர்.எப். தலைவருமான என்.கண்ணையாவுக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்