ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பதக்கம் வென்றார்
சர்வதேச அளவிலான போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பதக்கம் வென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
நெதர்லாந்தில் சர்வதேச அளவிலான காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் பங்கேற்கும் 2022-ம் ஆண்டிற்கான தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை சப்-இன்ஸ்பெக்டராக உள்ள கிருஷ்ணமூர்த்தி (வயது52) என்பவரும் பங்கேற்றார். இதில் 5 கிலோமீட்டர் தூரம் வேகமாக நடந்து வரும் போட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இவரை போலீஸ் அதிகாரிகளும், சக போலீசாரும் பாராட்டினர்.