ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, மேலாளர் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர். பின்னர் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அப்போது தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கூறியதாவது:- பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுவரை நடைபெற்ற பணிகள், நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. உறுப்பினர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றார்.