ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-08-25 19:00 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முதல் தீர்மானமாக 125 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு நகராட்சியின் சிறப்பான மக்கள் சேவை பணிகளுக்கு 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக அரசால் சிறந்த முதல் நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சிறந்த முதல் நகராட்சியாக தேர்வு செய்து அறிவித்தமைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலருக்கும், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும், திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குனர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் ராஐமாணிக்கம், நகர்மன்ற பொறியாளர் தங்கபாண்டியன், நகராட்சி மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் சந்திரா மற்றும் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொணடனர். முடிவில் டெங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்