ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-07-14 21:28 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூரத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடிப்பூரத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலையில் 5 மணிக்கு ஆண்டாள், ெரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் கொடி மாட வீதிகள் மற்றும் ரத வீதிகள் வழியாக யானை முன்னே செல்ல ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் காலை 9.50 மணிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று 9.57 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.

ரெங்க மன்னார் புறப்பாடு

ரகுராம பட்டர் சிறப்பு பூஜை நடத்தி கொடியேற்றினார். கொடியேற்றத்தின் போது பக்தர்கள் 'கோவிந்தா கோபாலா' என கோஷம் எழுப்பினர். பின்னர் ஆண்டாள், ெரங்க மன்னார் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு 16 வண்டி சப்பர தேரில் ஆண்டாள், ெரங்க மன்னார் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ெகாடியேற்றும் நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், மான்ராஜ் எம்.எல்.ஏ., பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் கலந்துகொண்ட பட்டிமன்றம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஊழியர்கள் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்