ஸ்ரீவைகுண்டம் ரெயில்வே தண்டவாள சீரமைப்பு பணி - மேலும் 2 நாட்களுக்கு ரெயில் சேவை ரத்து

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.;

Update: 2023-12-23 03:59 GMT

தூத்துக்குடி, 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. 

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இன்னும் தண்டவாள சீரமைப்பு பணிகள் முடியவில்லை.

இதன் காரணமாக இந்த பாதையில் மேலும் 2 நாட்களுக்கு ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர் முன்பதிவில்லா ரெயில் நெல்லை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்