ஸ்ரீசிக் ஷகேந்திரா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் ஸ்ரீசிக் ஷகேந்திரா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Update: 2022-07-28 16:46 GMT

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே குலதீபமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிக் ஷகேந்திரா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 100 சதவீத தேர்ச்சி என்ற சிறப்பை இப்பள்ளி பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், செயலாளர் ஏ.எஸ்.செந்தில், தாளாளர் எஸ்.அஸ்வின் பாலாஜி, முதல்வர் பி.ஆர்.ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளை பள்ளியின் நிர்வாகத்தினர் பாராட்டினர். மேலும் 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவ-மாணவிகள், 11-ம் வகுப்பில் என்ன பிரிவு தேர்ந்தெடுப்பது குறித்து முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனை கூறினர்

Tags:    

மேலும் செய்திகள்