ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 10-ம் நாள் திருவிழா - மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி

மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் இன்று காலை அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

Update: 2023-01-01 15:57 GMT

திருச்சி,

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா, கடந்த டிசம்பர் 22-ந்தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பகல்பத்து உற்சவத்தின் 10-ம் திருவிழாவான இன்று, நம்பெருமாள் அசுரர்களிடம் இருந்து தேவர்களை காத்ததை உணர்த்தும் வகையில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் இன்று காலை அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், புஜ கீர்த்தி, ஏலக்காய் ஜடை தரித்து பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். இதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2-ஆம் தேதி (நாளை) முக்கிய நிகழ்வான பரம பதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்