ஸ்ரீரங்கம் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
ஸ்ரீரங்கம் போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சியில் பள்ளி-கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களுடனும், முகவர்களுடனும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் காளிமுத்து தொடர்பு வைத்து இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் கமிஷனர் என்.காமினி, போலீஸ்காரர் காளிமுத்து மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவரவே அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.