சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வள்ளியூர் அருகே சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-12-04 18:45 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே மடப்புரத்தில் 100 ஆண்டு பழமைவாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக வாஸ்து சாந்தியுடன முதல் கால யாகசாலை பூஜையும், 2-ம் நாள் காலையில் யாகசாலை பூஜையும், மாலையில் அஷ்ட பந்தனம் மருந்து சாத்துதலும் நடந்தது.

நேற்று காலையில் விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், இரவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மடப்புரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்