ஸ்ரீ ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி
சேவூர் கிராமத்தில் ஸ்ரீ ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஆரணி
சேவூர் கிராமத்தில் ஸ்ரீ ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ணமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ.பள்ளி சார்பில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க தூய்மை பாரத இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக அனைவரும் சேவூர் கிராமத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.கல்வி அறக்கட்டளையின் தலைவர் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமையில் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
தாளாளர் ஆர்.சந்தோஷ் குமார் ,துணைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமார், துணை செயலாளர் மீனு தர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் (பொறுப்பு) சொர்ணாம்பிகை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிராமம் முழுவதும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று வீடு வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்கையும் பாதிப்புகளையும் விளக்கினர். இதனை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நாடகம் மற்றும் பாடல் மூலம் பிரச்சாரம் செய்தனர்.
மாணவர்கள் வீடு தோறும் கழிவறை உள்ளதா எனக் கணக்கெடுப்பு நடத்தினர். முடிவில் கிராம மக்கள் இனி திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை என உறுதி மொழியும் எடுத்தனர். இதில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.