இலங்கையின் நிலைதான் இந்தியாவில் ஏற்படும்

மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையின் நிலைதான் இந்தியாவில் ஏற்படும் என முத்தரசன் கூறினார்.

Update: 2022-07-21 18:27 GMT

திருமக்கோட்டை:

மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையின் நிலைதான் இந்தியாவில் ஏற்படும் என முத்தரசன் கூறினார்.

பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட 24-வது மாநாடு கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரம் பகுதியில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்து மக்களை சிரமப்படுத்தி வருகிறது.

இலங்கையின் நிலை ஏற்படும்

மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையின் நிலை தான் இந்தியாவில் ஏற்படும். மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்தினால் தான் மானியம் வழங்கப்படும் என நிர்பந்தம் செய்தால் அதனை எதிர்த்து அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்.

உரங்கள் தட்டுப்பாடு

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனியார் உரக்கடைகளில அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் நிபந்தனை இன்றி கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்