இலங்கை தமிழர் திடீர் உண்ணாவிரதம்

இலங்கை தமிழர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2023-09-07 20:24 GMT

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு கைதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, தெற்கு சூடான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் இலங்கை தமிழரான முகம்மது யாசிர் (வயது 37) என்பவரும் மோசடி வழக்கு தொடர்பாக கைதாகி அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தன் மீதான வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த உண்ணாவிரதத்தால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்