போலீஸ் ஏட்டை தாக்கிய இலங்கை அகதி கைது

மார்த்தாண்டம் அருகே குடி போதையில் தகராறு செய்தவரை தட்டி கேட்ட போலீஸ் ஏட்டை தாக்கிய இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-05 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே குடி போதையில் தகராறு செய்தவரை தட்டி கேட்ட போலீஸ் ஏட்டை தாக்கிய இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு

தக்கலை அருகே உள்ள மூலச்சல் புறந்தால்விளையை சேர்ந்தவர் சுந்தர் (வயது 42). இவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலையில் சுந்தர்், போலீஸ் ஏட்டு ராஜேஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்றனர். அந்த நேரத்தில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் தீபன் (32) என்பவர் அங்கே குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இலங்கை அகதி கைது

அதை பார்த்த போலீஸ் ஏட்டு சுந்தர், ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என்று தீபனை தட்டிக் கேட்டார். அதற்கு என் வீட்டில் நான் இப்படித்தான் செய்வேன் என்று கூறிய தீபன் போலீஸ் ஏட்டு சுந்தரை ஆபாசமாக திட்டினார். மேலும் அவர் தனது கையால் சுந்தரின் உதட்டில் குத்தி காயப்படுத்தி உள்ளார். மேலும் தீபன் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை காட்டி போலீஸ் ஏட்டு சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து போலீஸ் ஏட்டு சுந்தர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து தீபனை கைது செய்தார்்.

Tags:    

மேலும் செய்திகள்