கால்நடைத்துறையில் வேலைவாய்ப்பு என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம்
கால்நடைத்துறையில் வேலைவாய்ப்பு என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சிஅளித்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் மோசடி தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.