டிரோன் ‌மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு

டிரோன் ‌மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டது.

Update: 2022-09-10 19:24 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் உளுந்து பயிரிட்டு உள்ள வயலில் ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி உள்பட வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து, உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதனால் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் விவசாயிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 நிமிடங்களில் இந்த தெளிப்பான்கள் மூலம் தெளிக்கவும், ஏக்கருக்கு ரூ. 600 மட்டுமே செலவு ஆகிறது. இதனால் நேரமும், கூலியும் மிச்சமாவதால் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்