வெறிநாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

வெறிநாய்கள் கடித்து புள்ளிமான் செத்தது.;

Update: 2023-02-04 19:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே கோடக்குடி கிராமத்தில் புள்ளி மான் ஒன்றை வெறி நாய்கள் கடித்தது. இதில் படுகாயம் அடைந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், வனத்துறை சரக அலுவலர் மேகலா, வனவர் சோனமுத்து மற்றும் முத்துராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து மானை பிரேத பரிசோதனை செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் மானை வனத்துறையினர் புதைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்