நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

சிவகங்கை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.;

Update: 2023-09-01 19:49 GMT


சிவகங்கையை அடுத்த இடையமேலூர் பகுதியில் புள்ளி மான்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது கண்மாய்களில் போதிய தண்ணீர் இல்லாததால் புள்ளிமான்கள் தண்ணீரை தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிகிறது. இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் தேடி வந்த ஒரு புள்ளிமான் நாயிடம் சிக்கி உள்ளது. கழுத்து மற்றும் பின்புறங்களில் நாய் கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பலியானது.

இது குறித்து அப்பகுதி மக்கள் சிவகங்கை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் சரவணன் நாய் கடித்து இறந்திருந்த புள்ளி மானை சிவகங்கை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.அங்கு வனச்சரகர் பார்த்திபன், வனவர் ராஜேஷ் முன்னிலையில் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து மேளக்காட்டு பகுதியில் புதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்