அரசு கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

திருப்பத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

Update: 2023-05-21 16:40 GMT

கந்திலி அருகே உள்ள திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பெ.சீனிவாச குமரன் தலைமை வகித்தார. கணிதத் துறை தலைவர் பா.ஹரி பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் தொகுதி எ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் மோகன் குமார், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத் துறைத் தலைவர் பெ.பல்லவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்