அரியலூர் கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியில் விளையாட்டு விழா
அரியலூர் கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
அரியலூர் கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அட்லாண்டா ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற தடகளவீரர் நடராஜன் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பேசினார். விழாவில் பள்ளியின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் அங்கயற்கண்ணி வரவேற்று பேசினார். துணைத்தலைவர் ஹரிஷ், தாளாளர்கள் பரமசிவம், தண்டபாணி, பள்ளி முதல்வர் அனிதா மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.