எத்திராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் விளையாட்டு விழா

எத்திராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

Update: 2023-08-04 20:21 GMT

எத்திராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 30-வது ஆண்டு விளையாட்டுவிழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக வேலூர் மற்றும் சென்னையின் சன்பீம் பள்ளிகள் தலைவர் டி.ஹரிகோபாலன் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

விழாவில் மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு சாகசம், கராத்தே, யோகா, போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளியின் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் எஸ்.பிரகாஷ், தொழிலதிபர் டி.எஸ்.உதயசங்கர், சமூக சேவகி சங்கமேஸ்வரி பட்டாபிராமன், பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். ஷர்மிளா, உதவி தலைமை ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்