இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஜபருல்லாஹ்கான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான், கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக முசாதிக் அலி கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.