பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

பனவடலிசத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2023-02-16 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள பலபத்திராமபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் சுஸ்லான் பவுண்டேஷன் சார்பில் மாணவ-மாணவிகளின் விளையாட்டு மேம்பாட்டுத்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. சுஸ்லான் பவுண்டேஷன் மேலாளர் முருகன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார். பள்ளி மாணவ-மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்