முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

பாளையங்கோட்டையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

Update: 2023-02-06 20:19 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. நெல்லை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று பாளையங்கோட்டையில் தொடங்கியது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தடகள போட்டி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, ஆக்கி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. வ.உ.சி. மைதானத்தில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதுதவிர மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மைதானம், ஜான்ஸ் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் பயிற்சியாளர்கள், மாணவ-மணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோர் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்