மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

Update: 2022-12-28 19:57 GMT

தஞ்சையில் ஆதரவற்றோர் இல்ல மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இதில் 1,200 பேர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு போட்டி

தஞ்சை மண்டலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதன் தொடக்க விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரிகுணசீலி வரவேற்றார். இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் பாரதி கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். குழந்தைகள் நலக்குழும தலைவர் உஷாநந்தினி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். போட்டிகளை தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், குழந்தைகள் பாதுகாப்பு மண்டல அலுவலர் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் ரவி, பால்வள துணை பதிவாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1,200 பேர் பங்கேற்பு

இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் இல்ல மாணவ, மாணவிகள் 1,200 பேர் கலந்து கொண்டனர். இதில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.இன்று (வியாழக்கிழமை) கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று மாலை 3 மணிக்கு தஞ்சை தீர்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்