பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

அம்பையில் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.;

Update: 2023-08-24 19:00 GMT

அம்பை:

அம்பையில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற்றன. விகாசா ஸ்ரீ அகடமி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளை நெல்லை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ் செல்வம் ஒலிம்பிக் கொடியையும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மருத்துவர் பிரகாஷ் தேசியக் கொடியையும் ஏற்றினர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு அகடமி தலைமை ஆசிரியை சிந்து முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் தயாபதி நளதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

விளையாட்டு போட்டிகளில் அம்பை வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 640 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை பள்ளி முதல் இடத்தையும், பெண்கள் பிரிவில் விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பிடித்தது.

நிகழ்ச்சியில் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தளவாய், அனைத்துப் பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமலை குமார், ஆசிரியர் ஜூலியன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்