மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
பரம்பூர் வட்டார அரசு மருத்துவமனையின் சார்பில் சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி பொது சுகாதார பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன் தலைமை தாங்கினார். இதில் கவிதைபோட்டி, பாட்டுப்போட்டி, கோலப்போட்டி, நடனப்போட்டி, இசைநாற்காலி போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.