சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-10-13 19:41 GMT

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் எட்டியுள்ளதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டியினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அந்த துறையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோ-கோ, கிரிக்கெட், கபடி, பூப்பந்து. எறிப்பந்து, ஹேண்ட்பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. அவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கோலப்போட்டி, சிறு சிறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அந்தந்த வட்டார மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. பரிசளிப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்