மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
பாளையங்கோட்டை:
தமிழ்நாடு மின்வாரிய நெல்லை மண்டல அளவில் பெண் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. நெல்லை மண்டல தலைமை பொறியாளர் (பொறுப்பு) குருசாமி மற்றும் காற்றாலை பண்ணைத் திட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் வீர லட்சுமணன், முதுநிலை நிர்வாக அலுவலர் முத்துக்குமாரசாமி, தணிக்கை அலுவலர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். சதுரங்கம், கேரம், மேஜைப்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன. இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் பணிபுரியும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி, விளையாட்டு பொறுப்பாளர்கள் மணத்தி கணேசன், ஜெயபால், அருணன், ராஜா, வாசு, லிவிங்ஸ்டன், சந்தானராஜ், ராபின் ஆகியோர் செய்திருந்தனர்.