மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

தா.பழூரில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-11-30 18:44 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வள மையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார வளமைய வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பலூன் உடைத்தல், கரண்டியில் எலுமிச்சை, நூலில் கட்டி தொங்கவிடப்பட்ட பன்னை விரைந்து சாப்பிடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்