மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

Update: 2022-11-30 18:45 GMT

கோத்தகிரி, 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், உருளைக்கிழங்கு சேகரித்தல், பந்து எரிதல், பலூன் உடைத்தல், லெமன் ஸ்பூன் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கோத்தகிரி வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் ராஜூ, சிறப்பு பயிற்றுநர் ரவி, மங்களவள்ளி, மீனா, இயன் முறை டாக்டர் திவ்யா, ஆசிரியர் மாதேஷ் மற்றும் இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்