அமைச்சு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி

தமிழக காவல்துறையில் மண்டலங்களுக்கு இடையே அமைச்சுபணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி திருச்சியில் தொடங்கியது. இதில் 700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Update: 2023-07-14 18:43 GMT

தமிழக காவல்துறையில் மண்டலங்களுக்கு இடையே அமைச்சுபணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி திருச்சியில் தொடங்கியது. இதில் 700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

விளையாட்டு போட்டி

62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை அமைச்சுபணியாளர்களுக்கான மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள்டென்னிஸ், பால் பேட்மிண்டன், எறிபந்து, செஸ், கேரம் உள்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

இதில் ஒற்றையர்பிரிவு, இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இன்று பரிசளிப்பு

இதில் திருச்சி மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம் உள்பட அனைத்து மண்டலங்களில் இருந்தும் 700 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணன் தலைமையிலான போலீசார் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்