மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

கொள்ளிடம் அருகே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

Update: 2022-11-29 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே நல்லூரில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் மாற்றுத்திறானாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. போட்டியை வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.இதில் ஓட்ட பந்தயம், தண்ணீர் நிரப்புதல், பலூன் வெடித்தல், இசை நாற்காலி, கைப்பந்து எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதி்ல் 70 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பேசினார்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சந்திரா, ஆசிரியர் பயிற்றுனர்கள் ஐசக்ஞானராஜ், அபூர்வராணி, மலர்கண்ணன், ஆசிரியர்கள் ரூபா, பிரவீனா, ராஜலட்சுமி, உமா, கீதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் கலந்துகொண்ட சுமார் 70 மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்