மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

ராதாபுரம் அருகே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2022-12-02 20:25 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் தாலுகா விஜயாபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வட்டார வள மையம் சார்பில் ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாமா தலைமை தாங்கினார். ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், தவளை ஓட்டம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பதக்கம், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விஜயாபதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கித்தேரியம்மாள், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்