மகளிருக்கான விளையாட்டு போட்டி
மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் பள்ளியில் மகளிருக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சரக அளவில் மகளிருக்கான விளையாட்டு போட்டி நடந்தது. பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் போட்டியை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். தொடர்ந்து மாணவிகளுக்கு கைப்பந்து, கோகோ, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் சரக அளவிலான அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.