சரக அளவிலான விளையாட்டு போட்டி

தர்மபுரியில் சரக அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2022-08-26 15:42 GMT

தர்மபுரி சரக அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கைப்பந்து, கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதை ஏராளமானோர் பார்வையிட்டனர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஏலகிரி பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்