விளையாட்டு போட்டி
வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.;
கீழக்கரை,
கீழக்கரை தாலுகா வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும். இதில் சதுரங்க போட்டி, கபடி போட்டி, கோகோ போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.முதல் கட்டமாக சதுரங்க போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.பள்ளியின் தலைமையாசிரியர் கருப்பையா, பள்ளி மேலாண்மை க்குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள் மற்றும் வேளானூர் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுற்றுவட்டார பகுதியில் உள்ள கீழக்கரை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ஏர்வாடி போன்ற 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.