ராமநாதபுரம் அணி சாதனை

ராமநாதபுரம் அணி சாதனை படைத்துள்ளது.

Update: 2022-12-04 16:36 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஏ.பி.ஜே. மிசைல் பாரா மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளிலும், மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். உலக மாற்றுதிறனாளிகளின் தினத்தையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தென் மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி திருநெல்வேலி நடைபெற்றது.இதில் ராமநாதபுரம் ஏ.பி.ஜே. மிசைல் பாரா விளையாட்டு அணியினர் செய்யது இப்ராஹிம் தலைமையில் பாரா விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு அமர்வு கைப்பந்து போட்டியில் விளையாடி 2-வது இடத்தை பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர். அமர்வு கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு நினைவுக்கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்