கோகோ போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
கோகோ போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
எருமப்பட்டி:
எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் கோகோ போட்டி நடந்தது. போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதிப்போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், குமாரபாளையம் எஸ்டீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் விளையாடினர். இதில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மேலும் மாவட்ட அளவிலான கோகோ போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குனர் சிவா, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில், நடராஜன், கீதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.