பொட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் வட்ட தடகள போட்டி பொன்னுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பொட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் வட்ட தடகள போட்டி பொன்னுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் வட்ட தடகள போட்டி நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார் பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். ஒலிம்பிக் சுடரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொறுப்பு கோபாலகிருஷ்ணன் ஏற்றினார். பள்ளி கொடியை அலங்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஏற்றினார். போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வரகூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, செவந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டிபட்டி பள்ளி உள்பட 53 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
சிறப்பு அழைப்பாளராக சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி கலந்து கொண்டு விளையாட்டு தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன், அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம், உடற்கல்வி ஆசிரியர்கள் எல்லையா நடராஜன், பெற்றோர் ஆசிரியர் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரேஷ்குமார் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொட்டிரெட்டிபட்டி உடற்கல்வி ஆசிரியர் தேவராஜ் நன்றி கூறினார்.