3 ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன், மீன் அழிப்பு

குற்றாலத்தில் 3 ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன், மீன் அழிக்கப்பட்டது.

Update: 2023-07-20 19:00 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகிறார்கள். இங்குள்ள ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்கு சுடச்சுட சிக்கன், மீன், மட்டன் போன்ற வகைகளை தயார் செய்து கொடுக்கிறார்கள். இவை தரமாக உள்ளதா? என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குற்றாலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் சோதனை செய்தார். அப்போது அங்கு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த கெட்டுப்போன 36 கிலோ சிக்கன் மற்றும் 15 கிலோ சாப்பாடு, நூடுல்ஸ், 20 லிட்டர் சால்னா ஆகியன அழிக்கப்பட்டன. நேற்று காலை மற்றொரு ஓட்டலில் இதேபோன்று வைத்திருந்த 18 கிலோ சிக்கன், சமைத்து வெகுநேரமான 6 கிலோ சாப்பாடு ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்தார். மற்றொரு ஓட்டலில் சிக்கன், மீன் ஆகியவற்றிற்கு கலர்பொடி கலக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அவற்றையும் பறிமுதல் செய்து அழித்தார். இதுதவிர தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்