வேகத்தடை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் வேகத்தடை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம்;
கும்பகோணம் அருகே அண்ணல் அக்ரஹாரம் எலுமிச்சங்காய் பாளையம் தாராசுரம் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி நேற்று காலை கும்பகோணம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்க்கு கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார்.
இதில் எலுமிச்சங்காய் பாளையம் பகுதி பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் ஒரு வார காலத்தில் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.