பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மாவட்ட தமிழ் ஆட்சி துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் நாகராஜன் தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையாளர் கோடீஸ்வரி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராஜா ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். போட்டியில் மாவட்டத்தில் உள்ள 35 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டி நடுவர்களாக அரசு பள்ளி தமிழாசிரியர்கள் கார்த்திக், சிறுமலர், பாலாமணி ஆகியோர் செயல்பட்டனர். இதில் காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரபாகரன் முதலிடத்தையும், மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ லக்சனா 2-ம் இடத்தையும், காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி சண்முக சிவானி 3-ம் இடத்தையும் பெற்றனர்.
மேலும் சிறப்பு பரிசுகளை கட்டுக்குடி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணியும், கோவிலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி முத்துலட்சுமியும் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர், அலுவலர்கள் வெண்ணிலா, சிராஜூதீன், முனியசாமி, கார்த்திகை ஆகியோர் செய்திருந்தனர்.