மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி 14-ந் தேதி நடக்கிறது

நேரு பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி 14-ந் தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

Update: 2022-11-10 19:45 GMT

நேரு பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி வருகிற 14-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டி நெல்லை டவுன் ஆர்ச் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெறுகிறது.

தலைப்புகள்

பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினவிழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களை போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளில் பேசலாம். கல்லூரி மாணவர்களுக்கு இந்திய விடுதலை போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும்-நேருவும், நேருவின் பஞ்சசீல கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதி புறா நேரு ஆகிய தலைப்புகளில் பேசலாம். இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதலை பெற்று, அதனை போட்டி நாளில் நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து 2 பேர் வீதம் பங்கேற்கலாம்.

பரிசு விவரம்

கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளில் நேரில் வழங்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இது தொடர்பான விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் செயல்பட்டு வரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0462-2502521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்