பரமத்திவேலூர்
பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு மகாருத்ர ஏகாதசனி, மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாகப் பெருவிழா நேற்று நடைபெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி காலை 7 மணிக்கு மகாருத்ர, ஏகாதசனி எனக் கூறப்படும் 121 முறை ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், செய்து தனாகர்சன குபேரலட்சுமி கலச ஆவாகன பூஜை பாராயண, மூல மந்திர, மகா மந்திர சன்னதி ஹோமங்கள் நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர், கால சந்தி கட்டளைதாரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.